Thursday 18 September 2008

Centininary year 2010 - Development Woks

29-09-2008
நூற்றாண்டில் தடம் பதிக்கும் கொக்குவில் இந்து அன்னை

2010ம் ஆண்டில் எமது கல்லூரித்தாய் நூறாவது ஆண்டில் தடம் பதிக்கும் வரலாற்று நிகழ்சி ஆரம்பமாகிறது. வரலாற்றில் ஒருமுறை மட்டும் வரும் இத்திருநாளில், பெருநாளில் அவளுக்கு மகுடம் சூட்டி, அழகூட்டி ஆராதிப்பது அவளின் புதல்வர்களாகிய எங்களின் வரலாற்றுக் கடமையாகும்.

நூற்றாண்டு விழா இந்தத் தலைமுறைக்கான ஒரு சந்தர்ப்பமாகும். அன்னையின் புதல்வர்கள் அனைவரதும் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு நின்று இந்த செய்தியூடாக எல்லோரது இதயங்களுக்கும் ஒரு நல்ல செய்தியை சொல்ல நான் பெரிதும் விரும்புகிறேன்.

நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கான அவை ஒன்று கல்லூரியில் 2004ல் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 25மில்லியன் ரூhபா செலவில் பல் வேறு அபிவிருத்திp வேலைகள் மேற் கொள்ளப்பட வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ன. இதற்கான நிதி ஆதாரத்தை கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து பெறுவதென எண்ணியுள்ளோம். எமது கல்லூரி அன்னையின் புதல்வர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் பலர் எம்முடன் அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்விக் கண்ணைத் திறந்த கல்லூரி அன்னையின் விருத்தியில் பழைய மாணவர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியமானதும் வரலாற்றுக் கடமையுமாகும்.

பழைய மாணவர் குடும்பம் ஒன்றிலிருந்து ஆகக் குறைந்த தொகையாக ரூபா50,000 வீதம் 25மில்லியன் ரூபாவைப் பெறலாம் என எண்ணியுள்ளோம். கல்லூரியின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியில் திரைநீக்கம் செய்யப்படவுள்ள நன்கொடையாளர் வரவுப் பட்டியலில் இவர்களது விபரங்கள் பொறிக்கப்பட்டு நிரந்தரமாகப் பேணப்படவுள்ளது.

'கல்விப்பணி கடவுள் பணி என்று சொல்வார்கள். எழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாப் புண்ணியங்களிலும் மேலானது என்று சான்றோர்கள் கூறியுள்ளார்கள். கல்விக் கண்ணைத் திறந்து விடுவதன் மூலம் பல தலைமுறைகளுக்கான வாழ்கைப் பாதைகளையும் பயணங்களையும் ஆரம்பித்து வைக்க முடியும். யாழப்பாண மக்களின் அழிக்க முடியாத மாபெரும் சொத்து கல்வியாகும்;. வேரறுந்து விழுது அறுந்து ஆதரவு அற்று நிற்கும் எம்மவர்களின் கல்விப் பணிக்கு நீங்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டுமென இறைவனைக் கேட்பது போல உங்களிடம் கேட்கிறோம். கல்லூரித்தாய்க்கு உதவுங்கள். அது உங்கள் வாழ்வுக்கு உந்து விசையாக அமையும்.

கல்லூரித் தாய்க்கு உதவுவதன் மூலம் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் இதயங்களின் நல்வாழ்வுக்கு நீங்கள் அத்திவாரம் இட முடியும். 'கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை' என இஸ்லாமிய நெறியில் ஒரு வாக்கு உண்டு. நீங்கள் பல வழிகளில் உதவுகிறீர்கள். கல்விப் பணிக்கு உதவி,; எமது கல்லூரியின் கல்விக்கண்களைத்திறக்க ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொக்குவில் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழாவை யொட்டிய அபிவிருத்தி வேலைகளுக்கான மதிப்பீடு உலகெங்கும் வாழ் கல்லுர்ரிமைந்தர்களின் கவனத்திற்கும் செயலுக்கும்.
1. சின்னத்தம்பி கட்டிட திருத்த வேலைகள்.ரூபா 1,207,5002.
2.செல்லையா கட்டிட திருத்த வேலைகள்....ரூபா 447,725 3.
3.பஞ்சலிங்கம் கேட்போர்கூடம்..................ரூபா 684,0004.
4.மகாதேவன் கட்டிடம்.....................................................ரூபா 590,0005.
5.மகேந்திரன் கட்டிடம்....................................................ரூபா 1,239,4306.
6.தென் பகுதி கட்டிடம் (6வகுப்பறைகள்) ..ரூபா 722,0007.
7.சுப்பிரமணியம் கட்டிடம் ..........................................ரூபா 2,259,7508.
8.சி. கே. கந்தசுவாமி கட்டிடம் .........ரூபா 1,065,8909.
9.பிரதான நூல் நிலையம் .........................................ரூபா 1,062,00010.
10.ஹண்டி பேரின்பநாயகம் சிறுவர் நூலகம்..ரூபா 245,25011.
11.சி. கே. கந்தசுவாமி படிப்பகம் .........ரூபா 1,750,00012.
12.முடிவு பெறாத கட்டிட வேலைகள் .. ரூபா 904,32513.
13. மலசலகூட திருத்த வேலைகள் ......ரூபா 109,02514.
14.ஹண்டி பேரின்பநாயகம் கட்டிட ...ரூபா 3,30969015.
15மதில்கள் ..........................................................................ரூபா 500,000

16. தளபாட திருத்தியமைப்பு .......................................ரூபா 500,00017.
17.மைதான சீரமைப்பு .................................................ரூபா 500,00018.
18.மைதான விஸ்தீகரிப்பு ...........................................ரூபா 500,00019.
19.விளையாட்டுப் போட்டிகள் ..................................ரூபா 1,411,90020.
20.கலைத்திறன் போட்டிகள் ........................................ரூபா 560,00021.

21.விழா செலவுகள் .......................................................ரூபா 1,700,000.
மெத்தம் ...........................................................................ரூபா 21,268,485

No comments: