Tuesday 2 September 2008

கதியின் புனித நீராட்டு விழாவும் இலண்டன் முறைகளும்



www.kokuvilhindu.com
கதியின் புனித நீராட்டு விழா தடல் புடலாக ஏற்பாடு செய்யப்பட்டது. பலவண்ண அழைப்பிதழ், பெரிய மண்டபம் பார்டி பரடைஸ், சிந்து மஹால்,
எனத் தகப்பன் அசத்திவிட்டார். தாய் லண்டனிலை முதல் முதலாக சாத்திர சம்பிரதாயப்படி நடக்கிறது இந்தச் சடங்கு தான் எண்டு வாறவை சொல்ல வேண்டும் என்று தொடங்கினார்.

கதி பிறந்தவுடன் வைத்த பெயர் கார்திகா. அவளுக்கு தனது மறைந்த பேத்தியின் நிiவாக இலட்சுமி என்று பெயர் வைக்கத்தான் தகப்பனுக்கு விருப்பம். தகப்பன் பக்கத்து பெயர் வைக்க தாய்க்கு விருப்பமில்லை. அது பழங்காலத்து பெயரப்பா, எண் சாத்திரப்படியும் சரிவராது என்று பல சாட்டுக்கள் சொல்லி அதை தட்டிக்கழித்து விட்டார்.
பிள்ளை கார்திகை நட்சத்திரத்தில் பிறந்தபடியால் கார்திகா எண்டு வைப்பம். நாலாம் திகதி பிறந்த படியால் ஒண்டாம் நம்பரிலை வர பெயர் வைக்க வேண்டும். அப்ப கார்ததிகா எண்டு பெயர் வைத்து ஆங்கிலத்திலை Carthyka எழுதச்சரியாயிருக்கும் என்று சொல்லி தனது தகப்பன் கார்திகேசுவை அதற்குச் சம்பத்தப் படுத்தி விட்டார் தாயார்.
ஆரம்பப்பாடசாலை ஆசிரியைக்கு அந்தப் பெயர் வாய்க்குள் நுழைய கடினமான படியால் அவர் Cathy அழைக்கத் தொடங்கிவிட்டார். கார்திகாவுக்கும் அந்தப் பெயர்தான் பிடித்துக் கொண்டது. தாய் தகப்பன் எல்லோரும் கதி என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கதி நடனமும் வீணையும் பயின்றாள். கதி மிக நன்றாக ஆடுவாள். அவளோடு ஐந்து பிள்ளைகள் பயின்றனர். மற்ற நால்வரும் நல்ல நிறம். கதி கொஞ்சம் மங்கல். அதனால் நடன ஆசிரியைக்கு கதியைப் பிடிக்காது. வேண்டுமென்று பிழை பிடிப்பது; மேடையில் ஆடும் போது பின்னால் விடுவது; போன்றவை பிடிக்காததால் கதி இடையில் சண்டை பிடித்துக் கொண்டு நடனத்தை நிறுத்தி விட்டு வீணையில் அதிக கவனம் செலுத்தி வந்தாள். இதற்கிடையில் தகப்பனுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்து விட்டது. முழுக்குடும்பமும் இந்தியா சென்று வந்தனர். வரும்போது வீணை ஆசிரியைக்கு ஒன்றும் கொண்டு வந்து கொடுக்கவில்லை. அன்றிலிருந்து வீணை ஆசிரியைக்கு கதியை பிடிக்காது. சில மாதங்களில் வீணை பயில்வதையும் விட்டாச்சு.

இப்போது கதியின் புனித நீராட்டு விழாவிற்கு வருவோம். கதியின் தகப்பனின் தங்கையும் தாயும் கனடாவிலிருந்து விழாவிற்கு வந்திருந்தனர். தகப்பனின் தாய்க்கு கதியின் அம்மாவை அவ்வளவு பிடிக்காது. சாமத்தியச் சடங்கு மாமியார்தான் முன்னுக்கு நின்று செய்யவேண்டும். தாய் முன்னுக்கு வரக்கூடாது அதுதான் முறை என்று ஒரு குண்டை வந்ததும் வராததுமாக தூக்கிப் போட்டு;ட்டா. அதற்கு விளக்கமும் கொடுத்தா. மகள் சாமத்தியப்பட்டுட்டா எண்டதும் தாய்க்கு கவலை வந்துடும் தான் கிழவியாப்போனன் எண்டு. தகப்பனுக்கு கவலை வந்துடும் தான் ;இனி சீதனம் தேட வேண்டுமெண்டு. கவலைப்படுகிறவையை முன்னுக்கு விடுகி;றேல்லை. மாமன் மாமி தான் சந்தோசப்படுவினம் தங்கடை வீட்டுக்கு மருமகள் றெடி என்டு. அதாலைதான் மாமன் மாமியை விட்டு சடங்கு செய்யிறவை. கதியின் தாய்க்கு இதைக் கேட்டதும் கடும் கோபம் தான் வீடியோவிலை வர ஏலாது என்டு. கோபத்தை மாமியிலை காட்ட எலாது. கோபத்தை காட்டீனது முறைகளில். இஞ்சை லண்டனிலை இந்த முறை தலை எல்லாம் பாக்கேலாது எண்டு அடிக்கடி சொல்லத் தொடங்கிவிட்டா.
நீராட்டு விழா முடிந்து தண்ணிப் பாட்டீ தொடங்கியது. பல வகையான குடி வகை பரிமாறப்பட்டது. கதியின் அம்மாவிற்கு மதுபானம் பரிமாறிய பையன் மேல் கோபம் வந்து விட்டது. 'தம்பி நீர் கிளாஸ் களை மாறி கொடுக்கிறீர். இந்தப் பெரிய கிளாசுக்குள் பியர், இந்த மெல்லிய நீட்டு கிளாசுக்குள்ளை வைன், இந்தக் கிளாசுக்குள்ளை விஸ்க்கி அப்பிடிக் கொடுக்குறதுதான் முறை.'

No comments: